இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனாதொற்று உறுதி

கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலையத்தில் மேலும் 43 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதியில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 110 ஆக அதிகரித்துள்ளதாக அப் பகுதியின் தலைமை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் பெண்கள் கொழும்பில் உள்ள நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கும், ஆண்கள் இரணவில வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சீதுவ பொது சுகாதார மருத்துவ அலுவலகர் பிரிவில் இன்றைய தினம் 819 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.

இப் பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் மாத்திரம் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர், எனினும் நேற்றைய தினம் இப் பகுதியிலிருந்து அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top