இலங்கை செய்திகள்

தேசிய பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க மங்களவின் ஆலோசனை

இலங்கை அரசாங்கம் முன்னரே எதிர்வு கூறமுடியாத பொருளாதார முறிவொன்றைத் தவிர்க்க விரும்பினால், இனிமேலும் தாமதிக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினர் யெங் ஜியேச்சி தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் சீனாவினால் தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் கடனுதவி தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் மற்றும் சீனாவின் கடன்பொறி தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.

முன்கூட்டியே எதிர்வுகூறமுடியாத பொருளாதார முறிவொன்றை இலங்கை தவிர்க்க வேண்டுமாக இருந்தால், அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.

தற்போது நாணய மற்றும் நிதிக்கொள்கைகளில் மிகவும் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

Most Popular

To Top