இலங்கை செய்திகள்

கொரோனா பரவல் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைப் போன்று பாரியளவிலான கொத்தணிகள் ஏற்பட்டால் இலங்கையிலுள்ள சுகாதாரத்துறையினரால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும்.

எனவே வைரஸ் பரவக் கூடி அபாயமுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றுக்கிடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

Most Popular

To Top