அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம – கல்வடுவாகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான கைதியே இவ்வர்று தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சட்ட விரோத மதுபான தயாரிப்பு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவராவார். அவர் தம்புத்தேகம நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறைச்சாலை வளாகத்தை துப்பரவு செய்து கொண்டிருந்ததாகவும் அதன் போதே அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தப்பிச் சென்ற கைதியை கைது செய்வது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
