தொழில் நுட்பம்

புதிய iPhone 12 அறிமுகம் -புதிதாக வருகிறது iPhone 12 mini !

உலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான, Apple நிறுவனம் தனது புதிய iPhone வரிசையினை அறிமுகம் செய்துள்ளது.

கலிபோர்னியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்வின்போது புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, iPhone 12 mini, iPhone 12, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max ஆகிய 4 புதிய திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த அனைத்து திறன்பேசிகளும் 5 G வலையமைப்பை அணுகுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கார்பன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், Apple நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top