இலங்கை செய்திகள்

கொழும்பின் முக்கிய வீதிகளில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பின் பல பகுதிகளில் உள்ள வீதிகளில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகளை தானாக இயங்கச் செய்வதற்கான செயன்முறையொன்று இன்று காலை தொடங்கப்பட்டது.

அதன்படி, காவல்துறையினர் இன்றி வீதிகளில் உள்ள சமிக்ஞை விளக்குகள் தானாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காலி வீதி, பேஸ்லைன் வீதி, மாலபே சந்தி, கெஸ்பேவ சந்தியிலிருந்து கொஹூவளை வரையில் மற்றும் ராஜகிரிய உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று முதல் வீதி சமிக்ஞை விளக்குகள் தானாக இயங்கவைக்கப்படவுள்ளன.

Most Popular

To Top