இலங்கை செய்திகள்

யாழில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் பற்றிய அதிர்ச்சி தகவல்!

ஆவா குழுவிற்கு வாள்கள் செய்து கொடுத்த இளைஞர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் வைத்து 3 வாள்களுடன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரையும், மீட்கப்பட்ட வாள்களையும், விசேட அதிரடிப்படையினர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Most Popular

To Top