இலங்கை செய்திகள்

நடுத்தர குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட இருக்கும் வீடுகள்!

நடுத்தர குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட இருக்கும் 5,000 வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 5,000 வீடுகளின் கட்டுமான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த 5,000 குடியிருப்புகள் கொழும்பு புளுமெண்டல், பேலியகொட, ஒருகொடவத்த, கொட்டாவா, பன்னிப்பிட்டிய, மலபே, கண்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செலவு 60 பில்லியன் ரூபாய் ஆகும்.

Most Popular

To Top