மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றுடைய மேலும் 145 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலிலிருந்த 48 பேருக்கு அவர்களுடன் நெருங்கி பழகிய 97 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது,
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5038 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1697 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இதுவரையில் 3328 பேர் குணமடைந்துள்ளனர் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
