உத்தேச 20ம் திருத்தச் சட்டத்திற்கு கத்தோலிக்க ஆயர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கத்தோலிக்க பேராயர் பேரவையினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் முனைப்புக்களை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடாது என கத்தோலிக்க பேராயர் பேரவை கோரியுள்ளது.
மாறாக புதிய ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்குவதே தற்போது இந்த தேசத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
