இலங்கை செய்திகள்

சான்றிதழ் வழங்க 25 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற முயற்சித்த அரச அதிகாரி கைது

சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 25 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற முயற்சித்த அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சான்றிதழ்களை உறுதிப்படுத்தும் நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த அதிகாரி பத்தரமுல்லையில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top