இலங்கை செய்திகள்

அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமானது மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலவெலவினால் வழங்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல் ஊடக அறிக்கையாக நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த அறிக்கையில் கொவிட் – 19 வைரஸ் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் அடங்கிய அறிக்கையின் பிரதிகள் ஊடக அமைச்சின் செயலாளர், கொவிட் – 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.சிறிதரன் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top