இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் கிளை அலுவலகம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வங்கியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் கணவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைக் காரியாலய ஊழியர்கள் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

