இலங்கை செய்திகள்

இனம் தெரியாதோரால் தீயிட்டு எரிக்கபட்ட சைக்கிள் திருத்தகம்

வவுனியா – பூந்தோட்டம் சாந்தசோலை உப வீதியில் அமைந்துள்ள சைக்கிள் திருத்தகத்தை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததுடன், நகரசபையின் தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வியாபார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Most Popular

To Top