இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கடற்படை வாகனம் மோதி விபத்து..!

யாழ்.சாவகச்சோி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடற்படையினரின் கப் வாகனம் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Most Popular

To Top