நாட்டில் மேலும் 49 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 49 கொரோனா தொற்றாளர்களும் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
அதன்படி மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் 32 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 17 பேரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய நோயாளர்களின் எண்ணிக்கை 1,446 ஆக உயர்வடைந்துள்ளது.
