இலங்கை செய்திகள்

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் சுகயீனமடைந்து மரணம்

பூகொட பொலிஸாரினால் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் சுகயீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சுகயீனம் அடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Most Popular

To Top