பொலனறுவை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று காலை 9. மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனினும் மின்னேரியா , ஹிங்குரகொட , மின்னேரியா நகரம் , (மின்னேரியா-ஹபரான வீதியின் கிரிதேல் வரை),கல் ஓயா , ஹிங்குரகொட நகரம், மலகாபுர, தம்பலவேவ மற்றும் சின்ஹ டகாம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்னேரியா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இந் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
