இலங்கை செய்திகள்

கொழும்பில் 6 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான பொரளையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் பலர் நடமாடியதன் காரணமாக இவ்வாறு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கிய பின்னர் இந்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top