இலங்கை செய்திகள்

20 வது திருத்தத்திற்கு எதிரான அனைத்து பொது போராட்டங்களையும் நிறுத்த முடிவு– ஐக்கிய மக்கள் சக்தி

கொரோனா பரவல் காரணமாக முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்திற்கு எதிரான அனைத்து பொது போராட்டங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளதாக அதன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் தமது கட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்கள் வழியாக இந்த சட்டத்திற்கு எதிராக கட்சி தனது பிரசாரத்தை முன்னெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அமைப்புக்கள் இருக்கும் வரை தமது கட்சி நிர்வாக ஜனாதிபதி பதவிக்கு எதிரானதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் 19 வது திருத்தம் ரத்து செய்யப்படுவதற்கு தமது கட்சி உடன்படாது என்று எரான் விக்ரமரட்ன குறி;ப்பிட்டுள்ளார்.

19வது அரசியலமைப்பின்கீழ் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்யும் உரிமை எவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான சுமார் 100 நிறுவனங்களின் கண்காய்வுகளை மேற்கொள்ளும் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அமைப்பைக் கொண்டிருக்கும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் தலைவிதியை இலங்கை கவனிக்க வேண்டியது அவசியம் என்றும் எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top