இலங்கை செய்திகள்

ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமித்தமைக்கு மைத்திரி சொன்ன காரணம்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களால் உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தனக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டன.

இதன் காரணமாகவே தமது ஆட்சிக்காலத்தில் ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க தாம் எடுத்த முடிவுக்கான காரணம் மிகவும் தெளிவாக உள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இரண்டாவது நாளாக சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, ஒவ்வொரு வாரமும் அதிகாரிகளுக்கு உளத்துறை ஒத்துழைப்புக்கூட்டம் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

எனினும் இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களும் அரசியல் தலைவர்களும் உளவுத்துறை ஒத்துழைப்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்று நிரூபித்தனர்.

இந்த பொய்யான சாட்சியத்தை பார்க்கும்போது தமது பதவிக்காலத்தில் தாம் ஏன் ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமித்தேன் என்பது தெளிவாகிறது.

இதன்போது ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதியிடம் ஆவணம் ஒன்று காட்டப்பட்டது. அதில் உளவுத்துறை வாராந்தக்கூட்டம் 2016 மே மாதம் முதல் ஆகஸ்ட் 2017 வரையில் மாத்திரமே நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை பல அரச சாரா நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றவியல் புலனாய்வு துறை விசாரணைகளில் நேரடியாக தலையிட்டனர்.

இது முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுயாதீன விசாரணைகளை நடத்துவதில் தடையாக இருந்தது என்று குறிப்பி ட்டார்.

முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகலா ரத்நாயக்க ஆணைக்குழு முன் அளித்த அறிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் (ஏஜி) துறையின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டார்.

முன்னதாக, ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் விசாரணை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தும்போது, குறிப்பாக ராணுவ அதிகாரிகள் தொடர்பான அழுத்தங்களை வாங்கியதாக கூறினார்.

சுயாதீன விசாரணைகளை நிறுத்த தாம் ஒருபோதும் கேட்கவில்லை, ஆனால் இந்த விசாரணைகளை மேற்கொள்ளும்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவற்றில் தலையீடுசெய்தமையை தாம் கண்டித்ததாக குறிப்பிட்டார்

தற்போதைய அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஷ் சாலே மீது ஏற்பட்ட சில அரசியல் அழுத்தங்கள் காரணமாக, அவரை மலேசியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக மைத்திரிபால குறிப்பிட்டார்.

குற்றப்புலனாய்வுத்துறையினர், சாலேயை அரசியல் ரீதியாக கைது செய்ய முயன்றது,

இதன்போது முன்னாள் இராணுவத் தளபதியின் உதவியுடன் அவரை மலேசியாவுக்கு அனுப்ப நான் நடவடிக்கை எடுத்ததாக சாடசியான மைத்திரிபால குறிப்பிட்டார்.

முப்படைகளின் பிரதானிகளும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் தமக்கு தெரியாமல் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக மைத்திரிபால குறிப்பிட்டார்.

லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தமக்கு தெரிவிக்காமல் தேவையற்ற முடிவுகளை எடுத்துள்ளார்.

அவர் ஆணைக்குழுவில் காலையில் பணிபுரிந்து வந்தார், மாலை நேரங்களில் அலரிமாளிகையில் அரசியல் செய்தார் என்றும் மைத்திரிபால குற்றம் சுமத்தினார். .

தனது ஆட்சிக் காலத்தில் கண்டி எசலா பெரஹராவை நடத்துவதில் சிரமப்பட்டதாகவும், ஏனெனில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பெரஹரா திருவிழாவில் யானைகளைப் பயன்படுத்துவது மிருகவதை என்றும் கூறியதாகவும் சாட்சி தெரிவித்தார்.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் யானைகளை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர், எனினும் பெரஹரா திருவிழாவில் யானைகளைப் பயன்படுத்துவது மிருகவதைஎன்று கூறினர்.

முந்தைய அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் நாட்டின் சிங்கள- பௌத்த பாரம்பரிய மரபுகளை பாதித்தன என்றும் மைத்திரிபால சிறிசேன சாட்சிமளித்தார்.

Most Popular

To Top