இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண சாரதிகள் யாழில் போராட்டம்

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண சாரதிகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நேற்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் தொடராக தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இதன்போது ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

Most Popular

To Top