இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியில் பயணிப்பவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட உத்தரவு

இலங்கையில் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் பதிவு ஒன்று மேற்கொள்ளுமாறு, முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முறையை இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகள் தொடர்பிலும் பதிவொன்றை பதிவு செய்து கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தங்கள் வாகனத்தில் பயணித்தவர் யார் என்பதனை அறிந்து கொள்ளுமாறும், அவர்கள் எந்த இடத்தில் ஏறினார்கள், எந்த இடத்தில் இறங்கினார்கள் என்பதனை கையடக்க தொலைபேசியில் அல்லது புத்தகம் ஒன்றில் குறித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஒத்துழைப்பு வழங்கத் தயார் – முச்சக்கர வண்டி சாரதிகள்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் தமது ஆதரவினை வழங்குவார்கள் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் பயணிகள் தரவு பதிவை பதிவு செய்வார்கள் என்றும், மேலும் கடுமையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவார்கள் என்றும் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பதற்கும், முகக் கவசம் அணியாதவர்கள் வாகனத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Most Popular

To Top