இலங்கை செய்திகள்

பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா – மாணவர்களுக்கு பரிசோதனை

சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க ,ரத்தொலுகம மற்றும் ஆடியம்பலம ஆகிய பிரதேசங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பரிசோதகர் சுரேஷ்குமார் தெரிவித்தார் .

அவர்களில் அநேகமானோர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சேர்ந்த ஊழியர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவார்கள்.

தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட சுதந்திர வர்த்தக வலயத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 39 ஆகும்.

சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (12) புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இடையில் ஆடியம்பலம பிரதேசத்தின் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் உள்ளிட்ட நெருங்கிப் பழகியவர்கள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Most Popular

To Top