இலங்கை செய்திகள்

வவுனியாவில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இவ் அறிவித்தலை மீறி வவுனியாவில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் உத்திரவிற்கமைய இன்று (12) மாலை வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை பார்வையிட்ட பொலிசார் அரச அதிபரின் உத்தரவை மீறி இயங்கிய மூன்று கல்வி நிலையங்களை மூடுமாறு பணித்ததுடன் அனுமதி பெறாது திறக்கப்பட்டமை குறித்து எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

இதன்போது தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கும் போது,

நான் இதுவரை பூட்டியிருந்தோம். இன்று தான் திறந்தோம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் சந்தேகம் கேட்க வந்ததால் திறந்தோம் அத்துடன் நான் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர் எனக்கு நிலமை தெரியும்.

இங்கு பிரச்சனை இல்லை என்பதால் திறந்தோம். ஊரடங்கு போட்டால் நாம் உதவி செய்வோம் தானே என்றார்.

Most Popular

To Top