இலங்கை செய்திகள்

கேகாலையில் மூன்று பெண் வைத்தியர்களுக்கு கொரோனா…!

கேகாலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களிலேயே இவர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வைத்தியர்கள் மூவரில் ஒருவரின் கணவருக்கும், புதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

Most Popular

To Top