இலங்கை செய்திகள்

சற்று முன்னர் ஊரடங்கு தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காவல் துறை பிரிவுகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ள காவல் துறை பிரிவுகளுக்குட்பட்ட நகரங்களில் நாளை, நாளை மறுதினம், மற்றும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆகிய தினங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் மூடப்படும் எனவும் அறிவித்தார்.

அத்துடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுடைய பிரயாணங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Most Popular

To Top