இலங்கை செய்திகள்

வடக்கில் மேலும் ஆறுபேருக்கு தொற்று உறுதி

வடமாகாணத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதன்படி கிளிநொச்சி இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமுல் இருக்கும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும், 320 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும்,

இதல் இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள் 6 பேரை தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்

Most Popular

To Top