இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொவிட்-19 தொற்றானது பணத்தாள்களிலும் தொலைபேசிகளின் திரைகளிலும் 28 நாட்கள் வரை இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விடவும் அதிக காலம் வாழ்வதாக அவுஸ்ரேலியாவின் தேசிய விஞ்ஞான நிறுவகம் முன்னெடுத்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் நிறுத்தப்பட்டுள்ள தொலைபேசியில் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யு.வி கதிர்கள் வைரஸை அழிப்பதாக முன்னர் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர, இருமல் மற்றும் பேசுகின்ற போதும் வைரஸ் வெகுவாக பரவுவதாக வைத்தியர்கள் தெரிவத்துள்ளனர்.

அத்துடன் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் ஊடாக வைரஸ் பரவக்கூடுமெனவும் கண்டறியப்பட்டுள்ளது.

Most Popular

To Top