ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகின்றன. இப்போட்டியின் வெற்றி, தோல்வியை மையமாகக் கொண்டு சூதாட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம், அபுதாபியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இப்போட்டியை மையமாக கொண்டு, கோவை பூலுவப்பட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் ஒரு கடையில் நான்கு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து விசாரித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த, 34 – 42 வயதுடைய நான்கு ஆண்களை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
அவர்களிடம் இருந்து, மொபைல் போன்கள் ரூ 3200 பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
