இலங்கை செய்திகள்

இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளின் பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை

இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளின் பணியாளர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தின் போது மினுவான்கொடை ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற பௌர்ணமி தின நிகழ்வில் பங்கேற்ற நபர் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த தொலைக்காட்சி அலைவரிசையின் பணியாளர்களிடமும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

அரசாங்க தொலைக்காட்சி சேவையொன்றினைச் சேர்ந்த 40 பணியாளர்கள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சிறுவர் தின நிகழ்வில் பங்கேற்ற தொலைக்காட்சி அலைவரிசையின் பணியாளர்களும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

இதேவேளை, ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் பணியாளர்களிடம் நேற்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை குறித்த அறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது.

Most Popular

To Top