இலங்கை செய்திகள்

மொரட்டுவையில் தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

மொரட்டுவையில் உள்ள மெடிஹெல்ப் தனியார் வைத்தியசாலையின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி ஒரு கொரோனா தொற்று நோயாளி குறித்த வைத்தியசாலைக்கு செல்லப்பட்டதாக கூறப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளி இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது சோதனை முடிவுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையின் வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top