இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார நிறுவனத்தில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று

கந்தானை இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தில் (LECO) கடமையாற்றி வரும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகள் மினுவங்கொட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தில் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கந்தானை இலங்கை மின்சார (தனியார்) நிறுவன பணியாளர்கள் 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில், 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Popular

To Top