இலங்கை செய்திகள்

கொரோனா அச்சத்திலும் கஞ்சா கடத்தல் – தீவிரமாக தேடும் பொலிஸார்

யாழ்.மாதகல் கடற்பகுதியில் சுமார் 214 கிலோ கஞ்சா கடற்படையினால் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் கஞ்சா கடத்திவந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கும் நிலையில் தப்பி சென்றவர்களை கடற்படையினர் தேடிவருகின்றனர்.

யாழ்.காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது. படகு ஒன்று மிதந்து கொண்டிருந்த நிலையில் படகை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து 214 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையினர் வருவதை அவதானித்து கடத்தல்காரர்கள் தப்பித்திருக்கலாம் என கருதப்படுவதுடன், கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Most Popular

To Top