கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸ் பரவலானது குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுவதாகவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலானது சற்று குறைந்து காணப்படுவதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
