இலங்கை செய்திகள்

மற்றொரு ஆடை தொழிற்சாலையில் தொற்று..! விஞ்ஞான பீடம் மூடப்பட்டது-தொடரும் நெருக்கடி

ருகுணு பல்கலைகழக விஞ்ஞான பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுடைய தந்தை கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலேயே பீடம் முற்றாக மூடப்பட்டுள்ளதாக துணைவேந்தர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் முன்னணி ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றான கம்பஹா திஹாரியாவில் Hela ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊழியரின் மனைவி மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிபவர்

மற்றும் அக்டோபர் 7 முதல் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலா ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் சோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

தற்போது சுகாதார நெறிமுறைகளின்படி கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. இதேவேளை பொரளைப் பிரதேசத்தில் இரண்டு உணவகங்களை மூட கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இருந்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இருவர்

பொரளை பகுதியில் அமைந்துள்ள இரு உணவகங் களிலிருந்து உணவு பெற்றுக் கொண்டமையால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் பொரளையிலுள்ள குறித்த உணவகத்திற்குச் சென்றமையால் அங்கு தொழில்புரியும் அனைவருக்கும்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Most Popular

To Top