இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாதோருக்கு 6 மாத சிறை: 10,000 அபராதம்

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் போன்ற சுகாதார விதிகளை மீறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளாக அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசங்களிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு செய்தி

இன்னும் இரு தினங்களில் புதிய சுகாதார படிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட உள்ளதென தெரிவிக்கும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு ஆளாகுவர் எனவும் தெரிவித்தார்.

இந்நாட்டின் மக்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்களை அமுல்படுத்த உள்ளதாகவும், அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தொற்று நோய் பரவல் காணப்படும் பகுதிகளில் உரிய சட்டதிட்டங்களை பின்பற்றத் தவறுவோருக்கு ஆறுமாத சிறைத் தண்டனையை வழங்கும் சட்டமொன்றும் அமுல்படுத்தப்பட உள்ளதெனவும் அவர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள், நோய்த் தன்மையை அறிந்து கொள்ள முன்வராதவர்கள், சமூக இடைவெளியை பேணத் தவறியவர்கள் ஆகியோருக்கு எதிராகவே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்தச் சட்டங்களை மீறினால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Most Popular

To Top