இலங்கை செய்திகள்

குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இக் காலக் கட்டத்தில் எந்தவொரு அவசர சேவைகளுக்காகவும் slemb.kuwait@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தூதரகத்தின் மூன்று அதிகாரிகளுக்கும் 44 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒக்டோபர் 11 வரை மூடப்படும் என்று தூதரகம் முன்னதாக கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top