இலங்கை செய்திகள்

61 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம்

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 61 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 39 பேர் தனிமைப்படுத்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் ஆவர். ஏனைய 22 பேர் தொழிற்சாலையின் தொழிலாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் ஆவர்.

மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தற்போது 1,247 ஆக உயர்வடைந்துள்ளது.

Most Popular

To Top