இலங்கை செய்திகள்

தம்புளையில் 80 பொருளாதார மத்திய நிலையங்களுக்கு சென்ற கொரோனா நோயாளி!

தம்புளை பொருளாதார நிலையத்திற்கு வந்த நபர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென தம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர்கள் இருவரும் துககஹா, இந்துராகார பிரதேசம் மற்றும் திவுலப்பிட்டிய, பட்டபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இதுவரையில் பீசீஆர் பரிசோதனையின் பின்னர் ரம்புக்கன வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர்கள் இருவரும் பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுடன் கதிர்காமம் பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

பிரென்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அறிந்துக் கொண்ட பின்னர் இந்த நபர்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளளனர்.

இதன் போது இருவருக்கும் கொரோனா தொற்றிமை உறுதியாகியுள்ளது.

இந்த நபர்கள் கடந்த 4ஆம் திகதி தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்று காலை 8 – 4.30 மணிவரை தம்புளை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவல் வெளியாகியவுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆபத்தான நிலைமைக்கு மத்தியில் இன்று காலை தம்புளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

எனினும் சுகாதார நடைமுறைகளின்றி அவர்கள் தம்புளை பொருளாதார நிலையத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக் கவசம் அணியாத பலர் கீழே கிடந்த பொருட்களை கொண்டு முகத்தை மூடிக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

Most Popular

To Top