இலங்கை செய்திகள்

நேற்று 105 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் நேற்றைய தினம் 105 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர். ஏனைய 103 பேர் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் ஆவர்.

இதன் மூலம் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,188 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது வரை நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,628 ஆக பதிவாகியுள்ளதுடன் குணமடைந்தவர்களின் தொகையும் 3,306 ஆக காணப்படுகிறது.

1,307 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 341 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top