இலங்கை செய்திகள்

நூற்றுக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தலைமறைவு – தொடரும் தேடுதல்

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடுகின்றோம்.

இவ்வாறு கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுடன் உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை அறிக்கைகள் தம்மிடம் உள்ளன எனவும், அதில் 119 பேரைக் கண்டறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Most Popular

To Top