இலங்கை செய்திகள்

யாழ் மாணவி கொழும்பில் உயிரிழப்பு;சோகத்தில் குடும்பம்

யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி நேற்று உயிரிழந்தார்

குறித்த மாணவி களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருடத்தில் கற்றுவந்தவர் என்பதுடன் பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார்.

இந்நிலையில் இவரின் உயிரிழப்பு பெற்றோர் உறவினர்கள் மாணவர்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular

To Top