இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ‘‍NEXT’ ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டதன் பின்னர், தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் அந்த பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே அதில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Most Popular

To Top