இலங்கை செய்திகள்

மீன்பிடி படகில் சென்றவருக்கு கொரோனா! மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை இன்று முதல் தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி இந்த மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகில் பயணித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இந்த கொரோனா தொற்றாளர், மேலும் 5 மீனவர்களுடன் ஆழ்கடலில் இருந்த போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

படகு கரை திரும்பியதும் அவர் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து படகில் பயணித்த ஏனைய 5 மீனவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top