இலங்கை செய்திகள்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

பொம்பியோ, இந்த மாத இறுதியில் தெற்காசிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையிலேயே ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு பொம்பியோ எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை பொம்பியோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் பொம்பியோவின் விஜயம் குறித்த அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று நிலைமை காரணமாக பொம்பியோவின் விஜயம் குறித்து எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Most Popular

To Top