மன்னார் – வான்கலை பகுதிகளிவ் 159 கிலோகிராமிற்கும் அதிகளவிலான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு , இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்கரைக்கு அருகில் உள்ள இடமொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்து 125 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை பொலிஸாரின் தீவிர சோதனையில் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 33 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு சந்கேநபர்கள் வான்கலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் 29 மற்றும் 36 வயதுடைய ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு , அவர்கள் இருவரையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
