இந்தியச் செய்திகள்

பாடகர் யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த S.P.B!ஏன் தெரியுமா? வைரலாகும் அரிய புகைப்படம்

பிரபல பாடகர் யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகம் இன்று முக்கிய நபரை இழந்துள்ளது என்றே சொல்லலாம், அந்தளவிற்கு தன்னுடைய பாடல் மூலம் கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் நின்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

இவரின் மரண செய்தியை திரைப்பிரபலங்கள் பலரால் இப்போது வரை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என எந்த பாகுபாடு இன்றி பேசக் கூடியவர், பழகக்கூடியவர், மனிதநேயம் கொண்டவர்.

அப்படிப்பட்டவரின் மரண செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பியின் அரிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடகரான யேசுதாஸ்க்கு, எஸ்.பி.பி பாத பூஜை செய்துள்ளார்.

தனது இசை பயணத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குருவாக யேசுதாஸ்க்கிற்கு அவர் பாத பூஜை செய்தார்.

Most Popular

To Top