இந்தியச் செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் S.P.B கொரோனா தொற்றால் இறக்கவில்லை; வேறு காரணம் வெளியானது

பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது

கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 15ஆம் திகதி மோசமடைந்தது. இதனையடுத்து, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்றால் இறக்கவில்லை மாரடைப்பால் அவரிற்கு மரணம் ஏற்பட்டதாக தனியார் மருத்துவமனை அறிக்கையில் உள்ளதுடன் அதனை அவ் வைத்திய சாலையின் வைத்தியர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

Most Popular

To Top