இந்தியச் செய்திகள்

மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா கொரோனாவுக்கு பலி

இந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமாகியுள்ளார்.

இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Most Popular

To Top